உலகின் மிகப்பெரிய பணக்காரரால் திறக்கப்பட்ட இலவச மழலையர் பள்ளி!

அக்டோபர் 19ம் தேதி முதல் இந்தப் பள்ளிகள் செயல்படவிருக்கின்றன. அவரது பெயரையே இந்த பள்ளிகளுக்கும் சூட்டியுள்ளார். இதற்கு ’Bezos Academy schools’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. குறைவான வருமானம் கொண்ட குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளுக்கே இந்தப் பள்ளியில் முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலிலும், இதற்கான வேலைகளை சிறப்பாக செய்தவர்களுக்கு ஜெஃப் பெசோஸ் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். வகுப்பறையை புகைப்படம் எடுத்து அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முதல்கட்டமாக அமெரிக்காவின் சில பகுதிகளில் இந்தப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.வாரத்தில் ஐந்து நாட்கள் இந்த மழலையர் பள்ளி செயல்படும். 3- 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.