உயிரிழந்த இராணுவ கோப்ரல் காமினி குலரத்திரவின் நினைவு தினம் இன்று நடைபெற்றுள்ளது.

கிளிநொச்சி ஆனையிறவில் 1991ம் ஆண்டு விடுதலைப்புலிகளின் புல்டோசர் மீது தாக்குதல் நடத்தி உயிரிழந்த இராணுவ கோப்ரல் காமினி குலரத்திரவின் நினைவு தினம் நேற்று 24.08 நடைபெற்றுள்ளது.


கிளிநொச்சி ஆனையிறவில் 1991ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24ம் திகதி இராணுவத்தினர் மீது தாக்குதல் மேற்கொண்ட விடுதலைப்புலிகள் கவசமிடப்பட்ட புல்டோசர் மூலம் தாக்குதல்களை மேற்கொண்ட போது அதன்மீது தாக்குதல் நடத்தி உயிழிந்த இராணுவ கோப்ரல் காமினி குலரத்தினவின் 29வது நினைவு தினம் நேற்று (24-08-2020) பிற்பகல் 5.00 மணிக்கு ஆனையிறவில் அமைந்துள்ள இராணுவ வீரனின் நினைவு தூபியில் நடைபெற்றுள்ளது.
நிகழ்வில் கிளிநொச்சி பாதுகாப்பு படைத்தலைமையத்தின் தளபதி Major general KNS kotuwegoda தளபதி மேஜர் ஜென்ரல் கே.என்.எஸ். கொதுவெகொட கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இந்நிகழ்வில் இராணுவ உயிரதிகாரிகளின் இராணுவத்தினர் பொலிஸ் அதிகாரி எனப்பலர் கலந்து கொண்டனர்.