உயிரணு நீ தானே!

Neeta-Shankar-Photography-Lalbagh-Couple-Pre-Wedding-Shoot-Bangalore-86

காலையிலே
கண் விழிக்கையிலே
கவி உதிக்குதடி
உன் நெணிவினாலே

காகிதமும் எழுத்து கோலும்
கண் முன் இருக்கலையே
அதனை தேடி தவம் கலைய
மனமும் சற்று துனியலையே

கற்பனையே என் சிந்தைக்குள்
மையச்சு பொறியாய் மாறுதடி
அனைத்து எழுத்துக்களும்
என் உயிரினில் ஒலிக்குதடி!

இத்தனை மயக்கத்தில் நான்
கண் விழிப்பதை நீ அறிவாயா?
என் கவிதையின் உயிரணு
நீ என்பதை மறந்தாயா

விடையளிப்பாயென
காத்திருக்கவில்லை கண்ணே!
என் பொருள் பொதிந்த விடை
நீயென உணர்ந்த நிலையில்!!!