உயர் அழுத்த மின்சார தூண் உடைந்தமையால் வீதி மூடப்பட்டது

வவுனியா கொறவப்பொத்தானை வீதியில் இடம்பெற்ற விபத்தினால் உயர் அழுத்த மின்சாரத்தூண் சேதமடைந்த நிலையில் குறித்த வீதியுடனான போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த வீதியில் அமைந்துள்ள உயர் அழுத்த மினசாரத்தூணுடன் இன்று அதிகாலை, பாரவூர்தி ஒன்று மோதியல் மின்சாரதூண் சேதமடைந்திருந்தது.
இந்நிலையில் இது தொடர்பாக மின்சார சபைக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில்  மின்சார கம்பத்தினை மாற்றி புதிய கம்பத்தினை அமைக்கும் பணிகள் மின்சார சபை ஊழியர்களால் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த திருத்தப்பணி காரணமாக கொறவப்பொத்தான வீதியூடாக நகருக்குள் வாகனங்கள் செல்வதற்கான பிரதான வீதி மூடப்பட்டுள்ளதுடன், மாற்று வழியினை பயன்படுத்துமாறு பொலிசாரால் சாரதிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வருகின்றது.