உயர்தர வகுப்புக்கள் தொடர்பில் கவனம்

தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ற விதத்தில் பாடத்திட்டங்களை புதிப்பித்தல் மற்றும் அபிவிருத்தி செய்தல் தொடர்பாக அமைச்சரவை பத்திரம் ஒன்றை முன்வைக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்நாட்டில் உள்ள பிரதான பாடசாலைகள் சிலவற்றின் அதிபர்களுடன் நேற்று (20) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் உயர்தர வகுப்புக்களில் பல்வேறு பாடங்களுக்கு பாடப்புத்தகம் இல்லாத காரணத்தினால் ஏற்பட்டுள்ள சிக்கல் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.