உப பிரதமர் பதவி தொடர்பில் பேச்சுவார்த்தை இல்லை

கொழும்பில் இன்று (24) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது உப பிரதமர் பதவி தொடர்பில் அரசாங்கத்தில் எவ்வித பேச்சுவார்த்தையும் இல்லை என அமைச்சர் பேராசிரியர் G.L. பீரிஸ் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் அடுத்த வருடம் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட முன்னர் அல்லது டிசம்பர் மாதத்திற்கு முன்னர் 19 ஆவது திருத்தத்தை நீக்குவது தொடர்பிலான யோசனை முன்வைக்கப்படவுள்ளது.

19 ஆவது திருத்தத்தினூடாக கொண்டுவரப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்கள் சுயாதீனமாக இல்லை எனவும் அமைச்சர், பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.