
என் கவிவரிகளை
அர்த்தப்படுத்தும்
அகராதி நீ.
உன்னாலே தான் என்
கவிதைகள் தினம்
கௌரவப்படுத்தபடுகிறது.
உன் நினைவுகளால்
என் தனிமையின்
இராத்திரிகள் தினம்
இன்னிசை கானம்
இசைக்கிறது…
என் தனிமை
பொழுதுகளின் காவலன்
நான் வரையும்
வரிகளுக்கு சொந்தக்காரன்
உன் நினைவுகளாலே
தான் தினம் அலங்கரிக்கப்படுகிறது நான்
வரையும் கவி வரிகள்…
விழிகளால் மொழி
பேசும் வித்தைக்காரன் நீ!!!
உறக்கத்தின் வேளையிலும்
கனவுகளாய் கதை பேசும்
என் கனவுகளின் சொந்தக்காரன் நீ!!!
மௌனங்களால் புதைந்து
போன உன் நினைவுகளின்
சங்கமத்தை கவிதையாய்
அறிமுகம் செய்தவன் நீ!!!!
யாருமற்ற தனிமை பொழுதுகளில்
என்னுள் தென்றலாய் புகுந்து
என் ஏகாந்த பொழுதுகளை
கவியரங்கமாக மாற்றியவன்
நீ தான்!!!!
என் இராத்திரிகளின்
மௌன பொழுதுகளை
கலர் வர்ணங்கள்
நிறைந்த கனாக்களாக
மாற்றியவன் நீ!!!
உன் சின்ன சின்ன
அன்பு தூறல்களால்
என்னை இதமாய்
நனைத்து சென்றவன் நீ.
நீ இல்லாத என்
அருகில் எப்போதும்
பிரிக்க முடியாத பாதரசம்
போலே என்னுடனே
உன் நினைவுகள் என்றும்
சங்கமம்….
ப்ரியமுடன்
…திபீகா ஹஜேந்திரன்