உன் அழகிய நினைவுகளோடு!!!

Cute Love Couple Wallpapers - Wallpaper Cave

ஆதவனின் வருகைக்கு
ஏங்கும் அதிகாலை பொழுதை போன்று
உன் வரவை எண்ணி தினம் தவிக்கிறேன்!!
எங்கே தான் இருக்கிறாய் நீ!!
கூட்டத்திலே சிறுபிள்ளையை
தவறவிட்ட தாயின் மனநிலை போன்று
உன் குரல் கேட்கும் திசை
எங்கும் தேடுதல் வேட்டை
செய்கிறது என் இரு விழிகள்.!!!
கனவுகளில் சலனம் செய்கிறாய் நீ!
உன் நினைவுகளுடனே தூங்கி
உன் நினைவுகளுடனே புலரும்
என் அதிகாலை பொழுதிற்கு
உன் அழைப்பில் வரும் ஒற்றை வார்த்தையே
சுப்ரபாதம்….
நீ ஸ்பரிசித்து சென்ற
ஒவ்வொரு பொருட்களுமே புனிதம்
எனக்கு!!!
நீ அணிந்து விட்டு கழற்றி
விட்டு சென்ற சட்டையில்
உன் காதல் வாசம்!!
நீ விட்டு சென்ற புத்தகமேசையின்
புத்தகங்களில் உன் கைரேகைகளின் வாசம்!!!
வாசனை திரவியங்களிலும் கூட
உன் வாசனை தான் இருக்கிறது!!!!
நீயென்ன ஜாதி மல்லிகையா?
அறையெங்கும் தான் நிறைந்து வழிகிறாய்!!
திரும்பும் திசையெங்கும்
உன் ஞாபக சிதறல்கள்.
பார்க்கும் திசை எங்கும்
உன் விம்பங்கள்!!
உலகிலிருந்து உன்னை
பிரிக்கும் சுவர்களினை
உடைத்து விட வேண்டும்
என தோன்றுகிறது எனக்கு..
இருந்தும் கற்பனைக்கு
அப்பால் விஞ்சிய சக்தி தனை
எண்ணி மெல்ல நகர்கிறேன்
உன் அழகிய நினைவுகளோடு!!!


திபீகா ஹஜேந்திரன்….