உனக்கானவள் இவள்..

மங்கையிவளின்

மனப் பெட்டகத்தில்

மணக்கும் நினைவுகள்

மனதிற்குப் பிடித்த

மணவாளனை 

மணமேடையில் கண்டு

மன்றாடும் 

மனதோடு

மட்டில்லா 

மகிழ்வுடன்

மன்னவன் முன்னே

மதிமயங்கி நிற்கும்

மணவறைக் காட்சி

மனக்கண் முன் தோன்றும்

மணநாளுக்காய்

இறைநாட்டம்

கிடைக்கும் வரை

காத்திருக்கும்

உனக்கானவள்

இவள்….