உடல் எடையை குறைக்கும் இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டையிலுள்ள பினால் என்ற வேதிப் பொருள் வாய்துர்நாற்றத்தை போக்குகிறது. பட்டையை சளி மற்றும் ப்ளூ காய்ச்சலின்போது மருந்தாகப் பயன்படுத்துகின்றனர்.

இலவங்கப்பட்டை பயன்பாடு உடலில் இரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் சமநிலையை பராமரிக்க உதவுகிறது. இந்த விஷயத்தில், நீரிழிவு நோயின் அபாயத்தை குறைக்கிறது.

இலவங்கப்பட்டை பயன்படுத்துவது உடலில் உள்ள கொழுப்பின் அளவை சீரானதாக வைத்திருப்பதைக் காணலாம். இது இதய நோய்களின் அபாயத்தை பெருமளவில் குறைக்கிறது.

உடல் எடை குறைவதற்கு இலவங்கப்பட்டை உதவுகிறது. இலவங்கப்பட்டையில் சிறிதளவு நார்ச்சத்து உள்ளது, இது செரிமானத்திற்கும் உடலில் உள்ள நச்சுப்பொருள்களை வெளியேற்றவும் உதவுகிறது.

லவங்க பட்டை நுரையீரலில் இருந்து சளியை அகற்றுவதால், பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு நுரையீரலில் ஏற்பட்ட இறுக்கம் மற்றும் அடைப்பை சரிசெய்ய உதவுகிறது.

லவங்கப்பட்டை இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. மேலும் கீல்வாதம், மூட்டுவலி, தசைவலியை சரி செய்யும். அதுமட்டுமல்ல மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும்.

லவங்கப்பட்டை வாயில் உள்ள பாக்டீரியாக்களை அகற்றுகிறது, இதனால்தான் பற்பொடி மற்றும் பற்பசைகளில் இலவங்கப்பட்டை பயன்படுத்தபடுகிறது.