உடல் ஆரோக்கியம் மேம்படுத்த உதவும் மருத்துவ குணங்கள் நிறைந்த சிறுகுறிஞ்சான்…!!

சர்க்கரை நோயை போக்கும் சிறுகுறிஞ்சான் | Diabetes course Gymnema sylvestre -  Dinakaran

ஒரு சிலருக்கு உடல் வெப்பம் அதிகரித்து பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இத்தகைய பிரச்சனைகள் நீங்க, சிறுகுறிஞ்சான் இலைகளை பக்குவம் செய்து, கசாயமாக காய்ச்சி, ஆறவைத்து அருந்துபவர்களுக்கு உடல் சூடு தணிந்து, உடல் குளுமை அடையும்.

பித்தம் உடலில் வாதம், பித்தம், கபம் என்கிற முக்குணங்கள் அனைவருக்குமே இருக்கின்றன. இதில் அதிக நேரம் கண் விழிப்பதாலும், பித்தத்தை அதிகரிக்கின்ற  உணவுகளை அதிகம் சாப்பிடுவதாலும் உடலில் பித்த தன்மை அதிகரித்து, பல பாதிப்புகளை உண்டாக்குகிறது.

சிறுகுறிஞ்சான் இலைகளை காயவைத்து,  பொடியாக்கி இளம் சூடான நீரில் கலந்து அருந்துபவர்களுக்கு பித்தம் உடனடியாக நீங்கும். 

சிறுகுறிஞ்சான் இலைகளை கஷாயம் செய்து அருந்தி வருபவர்களுக்கு நல்ல பசி உணர்வு தூண்டப் பெற்று, உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது. 

நீரிழிவு நோய் கட்டுப்பட சிறுகுறிஞ்சான் இலைகள், அத்துடன் சம எடை அளவு நாவற்கொட்டைகள் எடுத்து இரண்டையும் தனித்தனியாக நிழலில் உலர்த்தி,  தனித்தனியாக இடித்து, தூளாக்கி, சலித்து, ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு, 1 தேக்கரண்டி அளவு தூளை வாயில் போட்டுகொண்டு வெந்நீர் அருந்தி வர  வேண்டும். இதை தொடர்ந்து 40 நாட்கள் வரை காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டு வர நீரிழிவு நோய் கட்டுப்படும். உடல்நலம் மேம்படும். 

சிறுகுறிஞ்சான் இலைகளை பொடி செய்து, பசும்பாலில் கலந்து சாப்பிடுபவர்களுக்கு நரம்புகள் வலிமை பெற்று நரம்புத் தளர்ச்சி போன்ற குறைபாடுகளை நீக்குகிறது.