உடல் ஆரோக்கியத்தை காக்கும் இயற்கை மருத்துவ குறிப்புகள் !!

HHH Enterprises Exports Company
  • தக்காளி சாஸ் செய்யும் போது, அதில் ஐந்து பல் வெள்ளை பூண்டையும் மைபோல் அரைத்து சேர்த்துக் கொண்டால் சுவை அதிகரிக்கும். அஜீரணம் வராமல்  காக்கும்.
  • மாதுளம் பிஞ்சை தயிருடன் சேர்த்து மை போல் அரைத்து சாப்பிட்டால் ரத்த பேதி குணமாகும்.
  • கசகசாவுடன் சிறிது கருப்பட்டி நாலு கிராம்பு சேர்த்து பொடித்து 3 வேளை சாப்பிட்டால் வயிற்று வலி நீங்கும். 
  • தேங்காய் வழுக்கையுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் மூலச் சூடு தணியும். 
  • வெந்தயத்துடன் நான்கு கிராம்புகளை வைத்து, சிறிது நீர் தெளித்து, மை போல அரைத்து, தலையில் பூசி அரைமணி நேரத்திற்கு பிறகு குளித்தால், பொடுகு தொல்லை ஈர்கள் அழியும். 
  • ஆரஞ்சு பழத்துடன் சிறிது தேன் சேர்த்துக் கொண்டால் குடலில் தீமை செய்யும் பூச்சிகள் உண்டாகாது. 
  • வெள்ளைப் பூண்டுடன் சிறிது துளசி சாறு சேர்த்து அரைத்து தேமல் மேல் பூசி வந்தால் தேமல் மறையும். 
  • வெங்காய ரசத்தையும், எலுமிச்ச பழ ரசத்தையும் சம அளவில் கலந்து காலரா நோயாளிகளுக்கு கொடுத்து வந்தால், வாந்தி பேதி நின்றுவிடும். 
  • புதினா கீரையை நீரில் போட்டு கொதிக்க வைத்து டீ டிகாஷன் போல் செய்து சாப்பிட்டால் சளியால் வரும் காய்ச்சல் குணமாகும். 
  • பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பு போகும்.