உங்கள் பிரச்சனைகளை தெரியப்படுத்துங்கள் தீர்வை பெற்று தருகின்றேன்

உங்கள் பிரச்சனைகளை தெரியப்படுத்துங்கள் தீர்வை பெற்று தருகின்றேன் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கு. திலீபன் தெரிவித்தார்.


வவுனியா மெனிக்பாம் கிராமத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,
உங்களுடைய பிரச்சனைகளை நம்பி என்னிடம் கொண்டு வாருங்கள். வவுனியாவில் தீர்க்க கூடிய பிரச்சனைகளை நான் தீர்த்து தருகின்றேன். பெரிய இடங்களுக்கு சென்று தீர்க்க வேண்டிய விடயங்கள் என்றால் எமது அமைச்சரூடாக அதனை தீர்த்து தருகின்றேன். ஆகவே நீங்கள் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளுங்கள். 


மெனிக்பாம் கிராமத்தில் தேர்தல் நேரத்தில் நாங்கள் எமது கட்சியின் மூத்த உறுப்பினர்களை சந்திக்க வந்தபோது மற்றுமொறு கட்சியினர் எம்மோடு முரண்படும் நிலைக்கு வந்திருந்தனர். எனவே நான் அந்த இடத்தில் இருந்து உடன் வெளியேறியிருந்தேன்.அமைச்சருக்கு கொடுக்கும் மரியாதையை விட அந்த நபருக்கே மக்கள் கொடுத்திருந்தனர். எனினும் நான் வெற்றியோ தோல்வியோ மீண்டும் இந்த கிராமத்திற்கு வருவேன் என கூறியிருந்தேன்.

உங்கள் தேவைகளை நிவர்த்தி செய்வேன் என கூறியிருந்தேன். ஆகவே தோல்வி வந்தாலும் நான் உங்களுக்கு செய்வேன் என்ற நம்பிக்கையை தந்தவன். இன்று வெற்றியுடன் நன்றி தெரிவிக்க வந்துள்ளேன்.
இந்நிலையில் மக்கள் எதிர்கொள்ளும் காணி உறுதிப்பிரச்சனையை நாம் ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்சவுக்கு தெரியப்படுத்தியிருந்தேன். இந்த பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும்.

அடுத்து வயல் காணி பிரச்சனைகள் வன இலாகா ஆக்கிரமித்திருந்தாலும் மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும்.
வைத்தியசாலைகளில் மருத்துவர் தாதியர்களின் பற்றாக்குறை காணப்படுகின்றது. அந்த நிலைமைகளை மாற்றுவேன். அதற்காக என்னில் நம்பிக்கை வையுங்கள்.


அத்துடு செட்டிகுளம் பகுதியில் ஆசிரியர் அதிபர்களின் பற்றாக்குறையால் பாடசாலைகள் மூடப்பட்டு வருகின்றது. அவை தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
நாங்கள் சொல்லிய விடயங்கள் ஜனாதிபதியின் இராஜாங்க உரையில் முன்வைக்கப்பட்டுள்ளது. இதில் நீங்கள் பெருமைப்பட வேண்டிய விடயம் தமிழ் அமைச்சர் சொன்ன விடயங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் இருந்து இந்த அரசாங்கம் எமது அமைச்சருக்கு எவ்வளவு முக்கியத்துவம் வழங்குகின்றனர் என்பதனை உணர்ந்து கொள்ளுங்கள்.
இந்நிலையில் உங்ள் பிரச்சனைகள் தெரியப்படுத்துங்கள். அத்துடன் செட்டிகுளம் பிரதேச அபிவிருத்திகுழு கூட்டம் இடம்பெறவுள்ளது. எனவே உங்கள் பிரச்சனைகளை எழுத்து மூலமாக தெரியப்படுத்துங்கள் தீர்வை பெற்றுத்தர முயற்சிக்கின்றேன்.