ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு முன்னரே 97 எச்சரிக்கைகள் கிடைத்தன- கமால் குணரத்ன.

Sri Lanka attacks: The family networks behind the bombings - BBC News

நாட்டில் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் நடைபெறுவதற்கு முன்னரே  97 எச்சரிக்கைகள் பாதுகாப்பு அமைப்புகளுக்கு கிடைத்துள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன  குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக கமால் குணரத்ன மேலும் கூறியுள்ளதாவது, “ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள்  குறித்து 97 முறை முன்கூட்டியே எச்சரிக்கைகள் கிடைக்கப்பெற்றன.

எனினும் அதற்கு பொறுப்பானவர்கள் அதனை பெரிதாக கவனத்தில் கொள்ளவில்லை. இதனால்தான் பலரின் உயிர் காவு கொள்ளப்பட்டதுடன் பெரும்பாலானோர் பலத்த காயங்களுக்கு உள்ளாகினர்.

அதாவது நாட்டின் வளர்ச்சிக்கு தேசிய பாதுகாப்பு மிகவும் முக்கியமாகும். அதனை பாதுகாக்காமல் நாட்டை அபிவிருத்தி பாதையை நோக்கி கொண்டுச் செல்ல முடியாது.
எனவே, நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.