ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டம் இன்று பிற்பகல் கிளிநொச்சியில் இடம்பெற்றது.

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டம் இன்று பிற்பகல் கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி சேவைச்சந்தை வளாகத்தில் குறித்த தேர்தல் பிரச்சார கூட்டம் பிற்பகல் 4 மணியளவில் இடம்பெற்றது. குறித்த கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டிருந்தார்.

நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிடுகையில், மாகாண சபை முறைமையின் ஊடாக சிறந்த தீர்வை நாம் பெற்றுக்கொள்ளலாம். நேற்று முன்தினம் ஜீலை மாதம் 29ம் திகதி 33 வருடங்கள் முடிவடைந்துவிட்டது. அன்றைக்கே நாங்கள் இந்த மாகாண சபை முறைமையை ஏற்றுக்கொண்டிருந்தால் இன்றைக்கு நடைமுறையில் நாங்கள் சுயநிர்ணய உரிமையை பெற்றிருக்கலாம். எங்களுடைய வாழ்வு இன்றையை விட பல மடங்கு முன்னேற்றகரமாக இருந்திருக்கும். இந்த இடம்பெயர்வுகள் இழப்புக்கள் இடம்பெற்றிருக்காது. ஆனால் துர்திஸ்டவசமாக கடந்த காலங்களில் தமிழர்களின் தலைவர்கள் என சொல்லப்பட்டுவந்தவர்கள் இல்லாத ஊருக்கு வழிகாட்டியிருக்கின்றார்கள். புண்ணுக்கு வலியா, மருந்துக்கு வலியா என்று கேட்டால் மருந்துக்கு வலி என்றது போன்றதான அரசியலை முன்னெடுத்திருக்கின்றார்கள். அதுவே எமது மக்களிற்கு இடப்பெயர்வுகள், துன்பங்கள் துயரங்களை கொடுத்தது என அவர் மேலும் தெரிவித்தார்.
நிகழ்வில் உரையாற்றிய முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரும், யாழ் தேர்தல் மாவட்ட வேட்பாளருமான வை.தவநாதன் கருத்து தெரிவிக்கையில், பல்வேறு அபிவிருத்திகள் எம்மால் முன்னெடுக்கப்பட்டது. கடந்த காலங்களில் எமது ஆதரவாளர்கள் மீது வெடிகளை தாக்கி எறிந்தவர்களும், அநாகரிகமாக பேசியவர்களும் இன்று அபிவிருத்தி என்ற நிலைக்கு வந்துள்ளனர். 30 வருடகாலத்தின் பின்னர் பல்வேறு இழப்புக்களை சந்தித்து இன்று எமது நிலைப்பாட்டுக்குள் வந்துள்ளனர் என அவர் தெரிவித்தார்.