இலஞ்சம் பெற்ற இ.போ.ச அதிகாரி கைது.

வடபிராந்திய போக்குவரத்து சபையின் முகாமையாளர் இலங்கை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் 65000 ரூபாய் பணம் இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் பிரதேசத்தில் வைத்து இலங்கை போக்குவரத்து சபையினுள் ஏற்பட்ட முறைப்பாடு ஒன்றை சீர்செய்வதற்காக 65000 ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்றுக்கொண்ட நிலையில், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.