இலங்கை மத்திய வங்கி புதிதாக 25.35 பில்லியன் ரூபாய் புதிய நாணயத் தாள்களை அச்சிட்டுள்ளது

இலங்கை மத்திய வங்கி நேற்று வெள்ளிக்கிழமை மேலும் புதிதாக 25.35 பில்லியன் ரூபாய் புதிய நாணயத் தாள்களை அச்சிட்டுள்ளது என அறிய முடிகின்றது.மார்ச் மாதத்தில் கொரோனா தொற்றினால் நாடு பெரும் பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில் இதுவரை 491.67 பில்லியன் ரூபாய் புதிய நாணயத் தாள்களை அச்சிட்டுள்ளது.குறிப்பாக இந்த மாதத்தில் மாட்டும் 81.15 பில்லியன் ரூபாய் புதிய நாணயத் தாள்களை அரசாங்கம் அச்சிட்டுள்ளது என அறிய முடிகின்றது.