இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

கோவிட்-19 வைரஸ் பரவல் நெருக்கடி காரணமாக இலங்கை குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் பிராந்திய கிளை அலுவலகங்களுக்கு பொது மக்கள் வருகை தருவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 12ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை இந்தத் தடை தொடரும் என்பதுடன் மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி ஊடாக மக்கள் சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வரவு குடியகல்வுத் திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகம் அறிக்கை ஒன்றின் மூலம் மக்களுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இலங்கை குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்திடம் இருந்து சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக அலுவலக நேரங்களில் (காலை 8 மணி தொடக்கம் பி.ப. 4.30 வரை) கீழ் காணும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக அல்லது மின்னஞ்சல் ஊடாக உரிய ஏற்பாடுகளைச் மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கடவுச்சீட்டுப் பிரிவுக்கு 070-7101060070-7101070 ஆகிய தொலைபேசி இலக்கங்களிலும் குடியுரிமைப் பிரிவு 070-7101030 ஆகிய தொலைபேசி தொலைபேசி இலக்கத்திலும், வெளிநாட்டுத் தூதரகப் பிரிவுக்கு  011-5329233011-5329235 ஆகிய தொலைபேசி இலக்கங்களிலும், விசா பிரிவுக்கு 070-7101050 என்ற தொலைபேசி இலக்கத்திலும்  துறைமுகப் பிரிவுக்கு 077-7782505 என்ற தொலைபேசி இலக்கத்திலும் தொடர்புகொண்டு சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

அதேபோன்று, dcvisa@immigration.gov.lk , acvisa1@immigration.gov.lk , acvisa2@immigration.gov.lk , acvisa@immigration.gov.lk என்ற மின்னஞ்சல்கள் ஊடாகவும் சேவைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.