இலங்கையில் 3 பேருக்கு கொரனா

இலங்கையில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வருகை தந்த 3 பேருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2,885 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து 12 பேர் பூரணமாக குணமடைந்து இன்று வெளியேறியுள்ள நிலையில் இதுவரையில் 2,658பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.
தற்போதைய நிலையில் 216 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
11 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.