இலங்கையில் வெளிநாட்டவர் கைது

வீசா அனுமதியின்றி சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த தாய்லாந்து மற்றும் சீன பிரஜைகள் மவுண்ட்லேனியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

20 தொடக்கம் 44 வயதுக்கிடையிலான 9 பெண்கள் உட்பட ஆண்கள் நால்வர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்பட ஒருவரிடமிருந்து சட்ட விரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்திவரப்பட்ட சுமார் 10 ஆயிரத்து 300 வெளிநாட்டு சிகரட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

தொடர்ந்தும் இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.