இலங்கையில் மரணித்த 9 பேரின் விபரம்

இலங்கையில் ஒரே நாளில் 9 பேர் கொரனாவால் மரணமடைந்துள்ள நிலையில் அவர்களின் விபரம் வருமாறு,

கொழும்பு 2 ஐச் சேர்ந்த 57 வயதுடைய ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.கொரோனா தொற்றினால் நியுமோனியா காய்ச்சல் ஏற்பட்டமையே  இவரது உயிரிழப்புக்கு காரணமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வெல்லம்பிட்டி பகுதியை சேர்ந்த 65 வயதுடைய ஒருவரும், தெமட்டகொட பகுதியச் சேர்ந்த 89 வயதுடைய ஆண் ஒருவரும்  கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

மேலும், கொழும்பு 10 பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய பெண்ணொருவரும், 72 வயதுடைய ஆண் ஒருவரும்  தமது வீடுகளிலேயே உயிரிழந்துள்ளனர்.கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகவே குறித்த இருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், கொழும்பு 13 ஐச் சேர்ந்த 69 வயதுடைய பெண்ணொருவரும் தமது வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகவே இவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், வெள்ளவத்தை பகுதியைச் சேர்ந்த 76 வயதுடைய ஆண் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து முல்லேரியா தொற்றுநோய் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

மேலும், வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய பெண்ணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் ஹோமாகம் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இவரும் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட நியுமோனியா காய்ச்சல் காரணமாகவே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.அத்துடன், 76 வயதுடைய பெண்ணொருவர்  கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் தனியார் வைத்தியசாலை ஒன்றிலிருந்து தேசிய தொற்றுநோய் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.இவரும் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட நியுமோனியா காய்ச்சல் காரணமாகவே உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.