இலங்கையில் நேற்றைய தினம் 392 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

இலங்கையில் நேற்றைய தினம் 392 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மினுவாங்கொடை – பேலியகொட கொத்தணிப் பரவலில் 389 பேரும் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய மூவரும் இவ்வாறு புதிய கொரோனா நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதனையடுத்து, பேலியகொடை – திவுலபிட்டி இரட்டைக் கொத்தணியுடன் தொடர்புடையவர்களின மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்தைக் கடந்து 13 ஆயிரத்து 84 ஆக அதிகரித்துள்ளது.இந்தநிலையில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 16 ஆயிரத்து 586 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை. நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 293 பேர் குணமடைந்து நேற்றையதினம் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.இதனையடுத்து, கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 324 ஆக அதிகரித்துள்ளதாக காதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.இதேநேரம் தொற்றுக்கு உள்ளான 5 ஆயிரத்து 206 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் 458 பேர் வைத்தியக் கண்காணிப்பில் உள்ளதுடன், கொரோனாவினால் 53 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.