இலங்கையர்கள் மேலும் 371 நாடு திரும்பினர்

ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் இந்தியாவில் தங்கியிருந்த 371 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர். இன்று (03) அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு பணிக்கு சென்றிருந்த 362 இலங்கையர்களும்,  இந்தியாவிலிருந்து 09 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.குறித்த அனைத்து பயணிகளும் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதுடன், தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.