இலக்கமுறைத் தொடர்பு தடமறிதல் தொழில்நுட்பம் தற்போது பீட்டா சோதனையில் உள்ளது.

கொவிட்-19 தொற்றுடையவர்கள் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளக் கூடிய நிகழ்வுகளைக் கண்காணிப்பதற்கான இலக்கமுறைத் (டிஜிட்டல்) தொடர்பு தடமறிதல் தொழில்நுட்பம் மற்றும் பயன்பாடுகளுக்கான திட்டம் தற்போது பீட்டா சோதனையில் உள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் ஒன்ராறியோவில் மட்டும் இந்த பயன்பாடு சோதனைக்கு தயாராக இருக்கும் என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஜூன் மாதம் தெரிவித்தார். ஆனால் அது பல்வேறு காரணங்களால் தாமதமானது.

இந்த நிலையில், குறித்த தடமறிதல் பயன்பாடு மிக விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

வைரஸுக்கு நேர்மறையானதை சோதிக்கும் எவருடைய சமீபத்திய தொடர்புகளையும் விரைவாகக் கண்டுபிடிப்பதை இந்த பயன்பாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.

முடக்கநிலை கட்டுப்பாடுகளிலிருந்து வெளியேறுவதற்கான அரசாங்கத்தின் மூலோபாயத்தின் ஒரு பகுதியாகவும் இது பார்க்கப்படுகின்றது.

இது எதிர்காலத்தில் ஏற்படும் பரவலைக் கண்காணிக்கவும், குறைக்கவும், பரவலான சோதனை மற்றும் தொடர்புத் தடமறிதல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டுள்ளது.

முன்னதாக குறித்த செயலியை பதிவிறக்கம் செய்ய கூட்டாட்சி அரசு விரைவில் கடுமையாக பரிந்துரைக்கும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியிருந்தார். அதேவேளை இந்த நடவடிக்கைகளின் போது, கனேடியர்கள் தனியுரிமைக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமென பிரதமர் ட்ரூடோ முன்னர் வலியுறுத்தியிருந்தார்.

இதற்கிடையில், கூட்டாட்சி ஊழியர்கள் ஒரு நாளைக்கு, வாரத்தில் ஏழு நாட்களும் ஆயிரக்கணக்கான தொடர்புத் தடங்களை அழைக்கத் தயாராக உள்ளனர்.