இறைச்சிக்காக கடத்திச்செல்லப்பட்ட மாடுகள் மீட்பு

வவுனியா நெடுங்கேணியில் இருந்து மதவாச்சி நோக்கி இறைச்சிக்காக கடத்திச்செல்லப்பட்ட 11 மாடுகளை மடுக்கந்த பொலிசார் மீட்டுள்ளனர்.
குறித்த மாடுகள் நெடுங்கேணியிலிருந்து மாமடுப்பகுதியூடாக மதவாச்சி நோக்கி கொண்டு செல்லப்படவிருந்த நிலையில் இன்று அதிகாலை மடுகந்தைப்பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசார் அவற்றை மீட்டுள்ளனர்.
அனுமதிப்பத்திரம் இன்றி முறையான நடைமுறைகளை பேணாமல் குறித்த மாடுகள் கொண்டுசெல்லப்பட்டிருந்ததாக தெரிவித்த பொலிசார் அவற்றை கடத்திச்செல்ல பயன்படுத்தப்பட்ட கப் வாகனத்தையும், இரண்டு நபர்களையும் கைதுசெய்துள்ளதாக தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைகளின் பின்னர்  நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.