இறுதியில்,

HD wallpaper: back, alone, urban photo, men | Wallpaper Flare

காலம் கடந்தோட
கவலை கடந்தோட
கைவிட்ட உறவை
கல்லறையில் நான் காண

கண்மூட துணிந்தால்
குற்றவுணர்வு கொன்றுவிடும்
கண்திறந்து பார்த்தால்
காதல்முகம் உயிர்கொள்ளும்

கலங்கியே நிற்கிறேன்
விழுங்கிடும் தனிமையில்
கர்வமாய் நகைக்காமல்
கரம்பற்றி கொள்ளடி

கண்ணீரும் அமிலமாய்
கரைத்திடுமே என்னுடலை
காலனை கொன்று புதைத்து
கண் முன்னே நில்லடி

காலை கதிரெல்லாம்
உன் கண்ணிமையில்
கண்டவன்
இன்று கதிரவனே
இறந்தது போல் இருள்சூழ்ந்து
இறக்கிறேன்!