இரு முச்சக்கரவண்டிகள் மோதி விபத்து!! சாரதிகள் தப்பினர்!!

வவுனியா கொறவப்பொத்தானை வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு முச்சக்கரவண்டிகள் சேதமடைந்ததுடன்,சாரதிகள் சிறுகாயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்..  வவுனியா நகரிலிருந்து கோவில்குளம் நோக்கி பயணித்த இரு முச்சக்கரவண்டிகள், கொறவப்பொத்தான வீதியில் சென்றுகொண்டிருந்த போது, ஒன்றை ஒன்று முந்திச்செல்ல முற்பட்ட நிலையில் குறித்த விபத்து இடம்பெற்றது.
விபத்தில் இரண்டு முச்சக்கரவண்டிகளும் சேதமடைந்த நிலையில் அதன் சாரதிகள் சிறுகாயங்களிற்குள்ளாகினர்.
விபத்து தொடர்பான விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.