இருசக்கர வாகனத்தில் சென்று வழிப்பறியில் ஈடுபட்டு வந்த இருவர் கைது! – திண்டிவனத்தில் சம்பவம்

திண்டிவனம் நெடுஞ்சாலைத்துறை பயணியர் மாளிகை எதிரே  ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியரான செல்லன் என்பவர் நடந்து  சென்று கொண்டிருந்தார்.  அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் அவரிடம் இருந்து செல்போனை பறித்து சென்றனர்.

இதுகுறித்து செல்லன் திண்டிவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை  செய்து வந்தனர். இந்நிலையில் மரக்காணம் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த தீவனூரை சார்ந்த 17 வயதுடைய சிறுவன் சுரேஷ் மற்றும் சையது கலீம் இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர்.

விசாரணையில் இருசக்கர வாகனத்தில் சென்று வழிப்பறியில் ஈடுபடுவது தெரியவந்தது.  இதனையடுத்து இருவரையும் போலீசார்  கைது செய்து அவர்களிடம் இருந்த செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை  பறிமுதல் செய்தனர்.