இராணுவ வீரர்கள் மூன்று கோவிட்-19

தனிமைப்படுத்தப்பட்டிருந்த மூன்று இராணுவ வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இராணுவத்தின் மின் மற்றும் பொறியியல் பிரிவில் கடமையாற்றும் இராணுவ வீரர்களுக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த மூவரும் தலவாக்கலை, பத்தனை ஸ்ரீபாத கல்வியல் கல்லூரியில் தனிப்படுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.அத்துடன், இவர்கள் பேலியகொட மீன் சந்தை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என குறிப்பிடப்படுகின்றது.