இராணுவத்தினர் முகக்கவசம் அணியாதவர்களுக்கு விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

முகக்கவசம் அணியாதோர் யாராக இருந்தாலும் அவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என இராணுவத்தினர் எச்சரித்துள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் கல்முனை, சவளக்கடை, சம்மாந்துறை, மத்தியமுகாம், அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் வீதியால் வருவோர் இடைநிறுத்தப்பட்டு முகக்கவசம் அணிந்து செல்லுமாறு இராணுவத்தினரால் அறிவுறுத்தப்பட்டனர்.

முகக்கவசம் அணியாது செல்பவர்கள் அடையாளம் காணப்பட்டு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் நலனை கருத்திற்கொண்டு பாதசாரிகள், வாகன உரிமையாளர்கள் மற்றும் பேருந்துகளில் பயணிப்பவர்கள் சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அறிவித்துள்ளனர்.