இரண்டு புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்த ஏர்டெல்!

Bharti Airtel had paid Rs 10000 crore to the DoT towards statutory dues

ஏர்டெல் நிறுவனம் தனது ரூ.129 மற்றும் ரூ.199 பிரீபெயிட் ரீசார்ஜ் சலுகைகளை அனைத்து வட்டாரங்களிலும் அறிமுகம் செய்துள்ளது. 
 மே மாதவாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த இரண்டு சேவைகள் தற்போது இந்தியாவின் அனைத்து வட்டாரங்களிலும் வழங்கப்படுவதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.

இரு சலுகைகளிலும் 24 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகின்றன. 
 ரூ.129 சலுகையில் 1 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 300 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 24 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 
 ரூ. 199 சலுகையில் தினமும் 1 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை 24 நாட்களுக்கு வழங்கப்படும்.