இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன பெண் கடலில் இருந்து உயிருடன் மீட்பு

கொலம்பியா நாட்டில் வசித்து வந்த ஏஞ்சலிகா கெய்டன் என்ற பெண்மனி தனது கணவரின் துன்புறுத்தல் தாங்க முடியாமல் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியேறியுள்ளார். இதனை தொடர்ந்து கெய்டனின் குடும்பத்தினர் சுமார் இரண்டு ஆண்டுகளாக அவரை தேடி வந்துள்ளனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் எஞ்சலிகா கெய்டா கொலம்பியா கடலில் மீனவர்களால் மீட்கப்பட்டுள்ளார். அவர் கடந்த சனிக்கிழமை காலை 6 மணியளவில் புவேர்ட்டோ கொலம்பியாவின் கரையிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடலில் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டார்.


இதனை கண்ட மீனவர்கள் கெய்டனை காப்பாற்றி கரைக்கு கொண்டுவந்தனர். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. நீண்ட நேரம் கடலில் இருந்ததால் ஏஞ்சலிகா கெய்டனுக்கு ஹைபோதெரபியா பாதிப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அருகில் உள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கெய்டனின் மகனும் மகளும் அவரை கொலம்பியா தலைநகர் போகோட்டாவிற்கு அழைத்து வருவதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பாக தெரிவிர்த்துள்ள எஞ்சலிகா கெய்டன், நான் கடந்த 20 ஆண்டுகளாக தனது கணவரால் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு வந்தேன். ஒரு கட்டத்தில் அவரது துன்புறுத்தல் தாங்க முடியாததால் 2018 ஆம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறினேன். தான் வெளியேறிய பிறகு காமினோ டி ஃபெ மீட்பு மையத்தில் தங்குவதற்கு ஒரு இடத்தைக் கண்டுபிடிப்பதற்கு முன்பு ஆறு மாதங்கள் தெருக்களில் அலைந்தேன். இருப்பினும் எனக்கு வாழ்வதற்கான எந்த வழியும் கிடைக்காததால் தனது உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்தேன். அதன்படி கடலில் குதித்தேன். ஆனால் நான் உயிரை விடுவதை கடவுள் விரும்பவில்லை எனவே தனக்கு மீண்டும் ஒரு வாழ்க்கையை அளித்துள்ளார் என அவர் தெரிவித்தார்.