இரண்டாவது திருமணம் செய்துகொள்கிறாரா பிரபல முன்னாள் ஹீரோயின்..?

சென்னை பிரபல நடிகை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள இருப்பதாக வந்துள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. செல்வராகவன் இயக்கிய ‘காதல் கொண்டேன்’ மூலமாக தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் சோனியா அகர்வால்.

இயக்குனர் செல்வராகவனை காதலித்து வந்த அவர், கடந்த 2006 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்துக்குப் பின் நடிப்பதை நிறுத்தினார் சோனியா. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2010 ஆம் ஆண்டில் செல்வராகவனை விவாகரத்து செய்தார். அதற்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். வேதம் படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்குத் திரும்பிய அவர், குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இப்போது கடைசியாக அயோக்யா படத்தில் நடித்திருந்தார்.

தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளிலும் நடித்து வரும் சோனியா அகர்வால், தனது சமூக வலைதளப் பக்கத்தில் திருமண போட்டோ ஒன்றை இப்போது பதிவிட்டுள்ளார். அதில் இன்னும் 3 நாட்களில் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் அவர் மறுமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் அதனால்தான் இப்படி போஸ்ட் போட்டிருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

ஆனால், இது புதிய திரைப்படம் பற்றிய ப்ரமோஷனாகவும் இருக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர். இதையடுத்து அவருக்கு வாழ்த்துக்களை ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.