’’இரண்டாம் குத்து’’ …. பட டீசரை நீக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு….

இரண்டாம் குத்து படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு || Tamil Cinema Irandam  kuthu movie release date

இரண்டாம் குத்து பட டீசரை சமூக வலைதளங்களில் இருந்து உடனே நீக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கஜினிகாந்த் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சந்தோஷ் பி. இவரது இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் இரண்டாம் குத்து. இப்படத்தின் போஸ்டர்கள் பல தரப்பினரையும் முகம் சுளிக்க வைத்தது.

பின்னர் பாரதிராஜாவுக்கும் இவருக்கும் கருத்து மோதல் ஏற்படவே, தனது கருத்துக்கு பாரதிராஜாவிடம் மன்னிப்புக் கேட்டார்.

இந்நிலையில் இப்படத்திற்கு சென்சார் சர்டிஃபிகேட் வேலைகள் முடிந்து இப்படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

குறிப்பாக இப்படம் வரும் தீபாவளி 14 திகதி அன்று தியேட்டர்களில் ரிலீசாகும் என இயக்குநர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இரண்டாம் குத்து டீசரை சமூக வலைதளங்களில் இருந்து உடனே நீக்க வேண்டுமென சமூக வலைதளங்களில் இருந்து உடனே நீக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இரண்டாம் குத்து டீசரில் இரட்டை அர்த்தங்கள், நாகரீமற்ற காட்சிகள் அமைந்துள்ளதால் சமூக வலைதளங்களில் இருந்து உடனடியாக நீக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.