இயக்குனராக அறிமுகமாகும் மனோஜ் பாரதிராஜா – வெளியான அறிவிப்பு!

இயக்குனர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் பாரதிராஜா இயக்குனராக அறிமுகமாகும் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தாஜ்மஹால் படத்தின் மூலம் 1999 ஆம் ஆண்டு கதாநாயகனாக அறிமுகமானார் மனோஜ் பாரதிராஜா. அதன் பிறகு பல படங்களில் நடித்தாலும் அவரால் பெரிய அளவில் கதாநாயகனாக வரமுடியவில்லை. இதனால் அவர் தந்தையைப் போல இயக்குனராகும் முயற்சியில் ஈடுபட்டார். சிவப்பு ரோஜாக்கள் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

இந்நிலையில் லிப்ரா புரொடக்‌ஷன் தயாரிக்கும் புதிய படத்தை அவர் இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் தலைப்பு மற்றும் நடிகர் நடிகையர் விவரங்கள் எல்லாம் விரைவில் அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது.