“இப்போதிருந்தே உழைத்தால்தான், அடுத்த 5 ஆண்டுகளில் ஆட்சியைப் பிடிக்க முடியும்!” – மத்திய அமைச்சர் அமித்ஷா

சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் தமிழக பா.ஜ.க மாநில, மாவட்ட நிர்வாகிகளுடன் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டார். கட்சி வளர்ச்சிப் பணிகள் மற்றும் வருகின்ற சட்டமன்ற தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் பேசிய மத்திய அமித்ஷா தேர்தல் பணிகளை வேகப்படுத்த வேண்டும் என்றும், இப்போதிருந்தே உழைத்தால்தான் அடுத்த 5 ஆண்டுகளில் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.

முன்னதாக, கட்சியினர் மத்தியில் பேசிய மாநில பாஜக தலைவர் முருகன், திமுகவை கடுமையாக சாடினார். வேல் யாத்திரை அத்தியாவசியமான ஒன்று என்றும், பாஜகவை நோக்கி இளைஞர்கள் அதிக அளவில் வந்து கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும், சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெற உழைக்க வேண்டும் எனவும் எல்.முருகன் கட்சி நிர்வாகிகளை கேட்டுக் கொண்டார்.