அனலைதீவு இளைஞர்களால் இன்றைய தினம் வைபவ ரீதியாக ஆரம்பிக்கப்பட்ட மரநடுகை விழாவின் சில பதிவுகள்…!

மரங்களின் வளர்ச்சி அனலையின் குளிர்ச்சி பசுமைப் புரட்சி எங்களின் மகிழ்ச்சி என்ற தாரக மந்திரத்திற்க்கு அமைவாக அனலைதீவு இளைஞர்களால் மரநடுகை நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.கௌரி அம்மன் ஆலய முன்றலில் ஆலய குருக்களின் ஆசியுடன் குறித்த மர நடுகை நிகழ்வானது இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்டது.மக்கள் மற்றும் இளைஞர்களை தம்மோடு இணைந்து மரநடுகையினை மேற்கொள்ள வருமாறும் அழைப்பு விடுத்தனர்.உங்கள் வீட்டில் பிறந்தநாள், திருமண நாள் மற்றும் அமரர்கள் ஞாபகார்த்த நாட்களை நினைவு கூர்ந்து வருடாவருடம் சிறுதொகை நிதி தருவதன் மூலம் ஊரில் பல மரநடுகை நிகழ்வை தாம் மேற்கொள்வோம் என்றும் தெரிவித்தனர்.