இன்றைய தினம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் தேர்தல்

இன்றைய தினம் கனடாவின் பிரிட்டிஷ்  கொலம்பியா மாகாணத்தில் நடக்கின்ற தேர்தலில் இதுவரை 1 .2  மில்லியன் வாக்காளர்கள் ஏற்கனேவே வாக்களித்து விட்டதால் எந்த கட்சி வெற்றி பெறும் என்பதை வாக்காளர்கள் முதலிலேயே தீர்மானித்து விட்டார்கள் என அரசியல் அவதானிகள் கருதுகின்றனர் இது 2017 வாக்குகளில் பதிவான வாக்குசீட்டுகளில்  58 சதவீதமாகும்

இந்த தேர்தல் பிரச்சார தொடக்கத்தில் இருந்ததே NDP கட்சியினர் இந்த தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறுவதட்கான சாத்தியக்கூறுகள் அதிகம் காணப்படுவதாக  சைமன் ஃப்ரேசர் பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானி ஸ்டீவர்ட் பெர்ஸ்ட் தெரிவித்தார் அவர் மேலும்  கூறுகையில், தொற்றுநோய் மிகப்பெரிய தேர்தல் கவலையாக இருந்தால், அதை கையாளுவதற்கு NDP பொதுமக்களின் ஒப்புதலைக் கொண்டுள்ளது என்றும் கூறினார்

வெள்ளிக்கிழமை பிற்பகல் வெளியிடப்பட்ட வான்கூவரை தளமாகக் கொண்ட ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில், மாகாணத்தில் தீர்மானிக்கப்பட்ட வாக்காளர்களில் பாதி பேர் John Horgan’s புதிய ஜனநாயகக் கட்சியினரை ஆதரிப்பதாகக் தெரிவித்துள்ளனர்  . இரண்டாவது இடத்தில் Andrew Wilkinson   தலைமையிலான லிபெரல் கட்சி  35 சதவீத ஆதரவுடனும் அதை தொடர்ந்து   புதிய தலைவர் சோனியா ஃபர்ஸ்டெனா (Sonia Furstenau )தலைமையிலான பசுமைக் கட்சி 13 சதவீத ஆதரவுடனும் உள்ளன