இன்று Manitoulin Island இல் நடைபெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் OPP அதிகாரி கொல்லப்பட்டார்

இன்று Manitoulin Island இல் நடைபெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் OPP அதிகாரி படுகொலை செய்யப்பட்டார்,இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரும் Manitoulin Island இல் நடந்த சம்பவத்தில் காயமடைந்து பின்னர் வைத்தியசாலையில் மரணம் அடைந்தார்

கொல்லப்பட்ட பொலீஸ் அதிகாரி Tenth Line அருகில் ஒரு trailer இனை பரிசோதனை செய்த பொது அந்த அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார் என்று பொலீஸ் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

Gore Bay பகுதியில் அமைந்துள்ள ஒரு இடத்தில் வேண்டப்படாத நபர் ஒருவரின் குழப்பகரமான நடவடிக்கை குறித்து தமக்கு நண்பகல் 12 .30 மணியளவில் தகவல் கிடைத்ததாக விசேட பொலீஸ் விசாரணை பிரிவு
தெரிவித்தது,அங்கு நடந்த சம்பவத்தில் பொலீஸ் சேவையில் 28 வருடங்கள் பணியாற்றிய மூத்த உறுப்பினரான constable Marc Hovingh மரணமடைந்தார்

“OPP இன் 28 ஆண்டு அனுபவமுள்ள Marc Hovingh, கடமையில் தைரியமாக பணியாற்றும் போது காயமடைந்து மரணமானார் என்று மிகுந்த சோகத்துடன் தான் தெரியப்படுத்துவதாக OPP ஆணையர் Thomas Carrique கூறினார்.