இன்று சர்வதேச சிறுவர் தினம்

சர்வதேச சிறுவர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது.

எமது நாடு எமது கைகளில்´ என்ற எண்ணக்கருவின் அடிப்படையில் இம்முறை தேசிய சிறுவர் தின விழா நாளை (02) நடைபெற உள்ளதாக ராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த தெரிவித்துள்ளார்.பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் பத்தரமுல்ல அபே கமவில் தேசிய சிறுவர் தின விழா இடம்பெறவுள்ளது.

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர்களைப் பாதுகாப்பதற்கான பல்வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.இதேவேளை சர்வதேச முதியோர் தினமும் இன்றைய தினம் கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.