இன்று எவிக்சன் இல்லை: திடீர் முடிவு ஏன்?

Bigg Boss 4 Tamil Vote: Bigg Boss Tamil Vote Results for Season 4, Check  Bigg Boss

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் நாமினேஷன் சிக்கியவர்கள் ஆரி, ஆஜித், பாலாஜி, அனிதா மற்றும் சுரேஷ் என்பது தெரிந்ததே,

இதில் நேற்று பாலாஜி நேற்று காப்பாற்றப்பட்டதாக கமலஹாசன் அறிவித்தார். எனவே மீதி உள்ள நால்வரில் ஒருவர் இன்று வெளியேற வேண்டிய நிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வெளி வந்த தகவலின்படி இந்த வாரம் எவிக்சன் இல்லை என்று கூறப்படுகிறது. ஏனெனில் ஆரி, ஆஜித், அனிதா மற்றும் சுரேஷ் ஆகிய நால்வரில் ஆஜித் குறைந்தபட்ச வாக்குகள் பெற்று இருந்ததாகவும் எனவே அவர்தான் எவிக்சன் செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது ஆனால் தன்னிடம் உள்ள எவிக்சன் பாஸை பயன்படுத்தி மீண்டும் வீட்டுக்குள் இருக்க ஆரி முடிவு செய்ததால் இந்த வாரம் எவிக்சன் இல்லை என்று பிக்பாஸ் முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது.
மேலும் இந்த வாரம் பாடகி சுசித்ரா வைல்ட்கார்ட் எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைவார் என்று கூறப்பட்ட நிலையில் அது அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.