இன்று ஆரம்பமாகியது கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை

கொரோனா வைரஸ் பரவலிற்கு மத்தியில் கல்விப்பொதுத்தராதர உயர்தர பரீட்சை நாடளாவிய ரீதியில் இன்று ஆரம்பமாகியது.
அந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் 2886 மாணவர்கள் இம்முறை உயர்தரப்பரீட்சைக்கு தோற்றவுள்ளதுடன் அவர்களிற்காக மாவட்ட ரீதியில் 25 பரீட்சை மத்தியநிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

சுகாதார வழிமுறைகள் இறுக்கமாகப்பேணப்பட்டு ஆரம்பித்துள்ள உயர்தர பரீட்சை இன்றிலிருந்து நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. 

இம்முறை நாடளாவிய ரீதியில் 362,824 மாணவர்கள் பரீட்சைக்கு தகுதிபெற்றுள்ளதுடன் அதற்காக 2648 பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 
இதேவேளை தனிமைப்படுத்தல் மற்றும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மாணவர்கள் பரீட்சை எழுதுவதற்காக 12 மேலதிக மத்திய நிலையங்கள் பரீட்சை திணைக்களத்தால் அமைக்கப்பட்டுள்ளது.