இனிவரும் காலங்களில் தனிப்பட்ட நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக தனக்கு அழைப்புவிடுக்க வேண்டாம் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

இனிவரும் காலங்களில் தனிப்பட்ட நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக தனக்கு அழைப்புவிடுக்க வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி தனது முழுமையான கவனத்தை உத்தியோகபூர்வ கடமைகளில் செலுத்த விரும்புவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, ஜனாதிபதி தனது பெரும்பாலான நேரங்களை அபிவிருத்திப் பணிகளிலும், ஆய்வு செய்வதிலும், பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றி ஆராய்வதிலும் பயன்படுத்துகின்றார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திறப்பு விழாக்கள், வெளியீட்டு நிகழ்வுகள் மற்றும் பல்வேறு செயற்பாடுகளுக்கு ஜனாதிபதி அழைக்கப்படுகின்ற நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.