இந்த வருட நினைவு நாள் கொண்டாட்டங்களில் Covid -19 தொற்று பரவல் காரணமாக பொதுமக்கள் பங்குகொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள்

இந்த வருட நினைவு நாள் கொண்டாட்டங்கள் GTA யின் பலபகுதிகளில் கொண்டாடப்பட இருக்கும் நிலையில் இந்த நினைவு நாள் (remembrance day ) கொண்டாட்டங்களில் Covid -19 தொற்று பரவல் காரணமாக பொதுமக்கள் பங்குகொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள். பொதுவாக டொரோண்டோவில் நடக்கும் இரண்டு பாரிய நினைவு நாள் கொண்டாட்டங்களில் பொதுமக்கள் கலந்துகொள்ள தடை விதிக்கபட்டிருக்கின்றது. ஒன்ராறியோ படைவீரர் நினைவிடத்தில் சட்டமன்றத்தின் முன் புல்வெளியில் நடைபெறும் விழாவில் ஒண்டாரியோ மாகாண முதல்வர் Doug Ford மற்றும் லெப்டினன்ட் கவர்னர் கலந்து கொள்வார்கள். சிட்டி ஹால், குயின்ஸ் பூங்காவில் நடக்கும் நினைவு நாள் கொண்டாட நிகழ்வுகளிலும் பொதுமக்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. இந்த நிகழ்வில் 21-துப்பாக்கி வணக்கம், ஹார்வர்ட் விமானம் வானில் பறந்து சாகசம் செய்வதுடன் கனடிய சினூக் ஹெலிகாப்டர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் இடம்பெறும்.