இந்த இலை சாற்றை குடித்தால் போதும், சர்க்கரை நோய் குணமாகிவிடும்…

நீரிழிவு நோய் தற்போது நாடு முழுவதும் அதிக அளவில் வேகமாக பரவி வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வரம்பின்றி அனைவருக்கும் நீரிழிவு நோய் ஏற்படுகிறது என்பது தான் தற்போதைய பயம். இதற்கு காரணம் என்னவென்று தெரியுமா? பெரும்பாலான காரணங்களாக கூறப்படுவது, வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவை தான்.

அதோடு மாறுபட்ட பணிகள், சரியான தூக்கமின்மை, உடற்பயிற்சி செய்யாமை போன்றவை உடலில் உள்ள ஹார்மோன்களை தொந்தரவு செய்து நீரிழிவு நோய்க்கு வழிவகுத்து விடுகின்றன.

நீரிழிவு நோயின் வகைகள்

நீரிழிவு நோயில் 2 வகை உள்ளன. டைப் 1 நீரிழிவு நோய் மற்றும் டைப் 2 நீரிழிவு நோய். இவற்றில் டைப் 1 நீரிழிவு நோய் எந்த வயதில் வேண்டுமானாலும் ஏற்படக்கூடும். உடலில் இன்சுலின் உற்பத்தி குறைவாகவோ அல்லது இன்சுலின் சுரப்பே இல்லாத போதோ ஏற்படக்கூடியது இது. டைப் 2 நீரிழிவு நோயானது பொதுவாக பெரியவர்களுக்கு காணப்படுகிறது. நீரிழிவு நோயாளிகளில் 90 சதவிகித பேர் இந்த வகையை சார்ந்தவர்கள். இது உடலில் சுரக்கும் இன்சுலின் பயன்படுத்தப்படாத போது ஏற்படக்கூடியது. இதற்காக செயற்கையாக இன்சுலின் மருந்துகள் வழங்கப்படும்.

உலக அளவில் நீரிழிவு நோயின் தாக்கம்

சர்வதேச நீரிழிவு அறக்கட்டளையின் (ஐ.டி.எஃப்) கருத்துப்படி, உலகில் அளவில் மொத்தம் 463 மில்லியன் மக்களுக்கு நீரிழிவு நோய் உள்ளது. தென்கிழக்கு ஆசியா பிராந்தியத்தில் மட்டும் 88 மில்லியன் மக்கள் உள்ளனர். இவர்களில் சுமார் 77 மில்லியன் மக்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். ஒட்டுமொத்த மக்கள்தொகையில் நீரிழிவு நோய் 8.9% என்று ஐ.டி.எஃப் கூறுகிறது. பொதுவாகவே, இந்த நோய் மரபணுக்கள் காரணமாக ஏற்படலாம். ஆனால் அவற்றை சீரான வாழ்க்கை முறை பழக்கங்கள் மூலம் கட்டுப்படுத்தலாம். இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் சிறுசிறு செயல்களே போதுமானது. வழக்கமான உடற்பயிற்சி செய்யும் பழக்கமானது தொடரும் பட்சத்தில், நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்து கொள்வது மட்டுமல்லாமல், ஆரோக்கியமான இதயம், சிறப்பான சிறுநீரக செயல்பாடு மற்றும் வலுவான நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றை வழங்கிடக்கூடும். அதோடு, ஆரோக்கியமான உணவை உங்கள் அன்றாட உணவில் நாம் சேர்த்துக் கொள்வது பல அற்புதங்களை நிகழ்த்திடும். உங்கள் இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ள உதவும் வகையில், ஆயுர்வேதத்தில் பல்வேறு மூலிகைகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் சீந்தில் கொடி.

ஆயுர்வேதத்தில் முக்கிய இடம் வகிக்கும் சீந்தில்

அழியாத தன்மை கொண்ட வேர் என்று ஆயுர்வேதம் குறிப்பிடுவது சீந்தில் கொடியை தான். இது ஆங்கிலத்தில் கிலோய் என்றும், டினோஸ்போரா கார்டிபோலியா என்ற தாவரவியர் பெயரையும் கொண்டது. இதை பொடியாகவோ, கேப்ஸ்யூல் வடிவிலோ பயன்படுத்தலாம். இல்லையென்றால், இதனை சாறாக கூட உட்கொள்ளலாம். டைப் 2 நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்க ஆயுர்வேதத்தில், இந்த மூலிகை மிகவும் பிரபலமானது. பண்டைய இந்திய ஆயுர்வேத நூல்களில், சீந்தில் கொடியை பெரும்பாலும் மதுனாஷினி என்று குறிப்பிடப்பட்டுள்ளனர். இதற்கு சமஸ்கிருதத்தில் “சர்க்கரையை அழிப்பவர்” என்று பொருள். உடல் பருமனைக் கட்டுப்படுத்துவது முதல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது வரை இதன் ஆரோக்கிய பலன்களை அடுக்கி கொண்டே செல்லலாம். இது அழற்சி எதிர்ப்பு, ஆர்த்ரைடிக் எதிர்ப்பு, ஒவ்வாமை எதிர்ப்பு, மலேரியா எதிர்ப்பு மற்றும் நீரிழிவு எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. அதனால் தான் பல ஆயுர்வேத மருத்துவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் இதனை பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர்.

நீரிழிவு நோயை எதிர்த்துப் போராட சீந்தில் எப்படி உதவுகிறது?

* சீந்திலானது உடலில், இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது.

* உடலில் கூடுதலாக உற்பத்தியாகும் குளுக்கோஸை எரிப்பதற்கு பயன்படுகிறது. அதனால் உடலில் இரத்த சர்க்கரை அளவு சீராக்குகிறது.

* சீந்திலின் பண்புகள் இரத்தச் சர்க்கரையைக் குறைக்கும் முகவராக செயல்படுவதோடு, குளுக்கோஸ் அளவைக் குறைத்திட உடலுக்கு உதவுகிறது.

* பயோடெக்னாலஜி தகவல் தேசிய மையம் (என்.சி.பி.ஐ) நடத்திய ஆய்வின்படி, சீந்தில், குறிப்பிடத்தக்க நீரிழிவு எதிர்ப்பு நடவடிக்கைகளைக் கொண்டுள்ளதாகவும், இன்சுலினுடன் ஒப்பிடும் போது 40 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை அதிக செயல்திறனைக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

* நீரிழிவு நோயை நிர்வகிப்பதில் ஒரு முக்கிய பகுதியாக, நல்ல செரிமான அமைப்பை பராமரித்து, குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் சீந்தில் உதவுகிறது.

சீந்தில் சாறு உட்கொள்ளும் முறை

சீந்தில் சாற்றை, அன்றாடம் காலை முதல் உணவாக உட்கொள்வது சிறந்தது. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், சீந்தில் இலைகளை தண்டுடன் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி கொள்ளவும். வேண்டுமென்றால், அதனுடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கலாம். இல்லாவிட்டால் கடைகளில் விற்கப்படும் சீந்தில் சாற்றையும் வாங்கி குடிக்கலாம்.