இந்து முன்னணி அமைப்பின் நிறுவன தலைவர் ராம.கோபாலன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்; அவருக்கு வயது 94

இந்து முன்னணி நிறுவன தலைவர் ராம.கோபாலனுக்கு வயது முதிர்வு காரணமாக அவ்வப்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அவர் வழக்கமாக சிகிச்சை பெறும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினார். 

இதன் பின்னர் மீண்டும் கடந்த 27ம் தேதியன்று அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.ராம.கோபாலனுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததால் அதற்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் காலமானார். 

இந்து முன்னணியின் தோற்றம்:

1980ம் ஆண்டு  இந்து முன்னணி இயக்கத்தை நிறுவினார் ராம.கோபாலன். விநாயகர் சதுர்த்தி விழாக்களை மாநிலம் தழுவிய அளவில் பிரம்மாண்டமான முறையில் இந்து முன்னணி அமைப்பினர் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது. இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.