“இந்திய அரசிலமைப்பின் படியே நாடு இயங்க வேண்டுமே தவிர பாஜகவின் திட்டப்படி அல்ல” – மெகபூபா முப்தி

காஷ்மீரின் சிறப்பு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதால் ஓராண்டுக்கும் மேல் வீட்டுக் காவலில் இருந்த பின், கடந்த வாரம் விடுதலை செய்யப்பட்ட மெகபூபா முப்தி, ஸ்ரீநகரில் முதன்முறையாக இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், சுதந்திர, ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற இந்தியாவுடன் தான் எங்களுக்கு இணக்கம் என்றும் இன்றைய இந்தியாவுடன் காஷ்மீர் மக்கள் சௌகரியமாக இல்லை என்றும்  தெரிவித்தார். 

மேலும் இந்திய அரசிலமைப்பின் படியே நாடு இயங்க வேண்டுமே தவிர பாஜகவின் திட்டபடி இயங்கத் தேவையில்லை என்றும் மெகபூபா முப்தி கூறினார்.