இந்தியா லெபனானுக்கு உதவி செய்ய திட்டம்

லெபனான் அரசுக்கு இந்தியா மனிதாபிமான அடிப்படையில் நிவாரணப் பொருடக்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது.

இது குறித்து ஐ.நாவுக்கான இந்திய தூதர் டி.எஸ்.திருமூர்த்தி கூறுகையில், “இது பயங்கரமான மனித சோகம். இந்தியா சார்பில் மருந்துகள், உணவுப் பொருட்கள் போன்ற நிவாரண பொருட்கள் மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக அனுப்பப்படும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெடி விபத்தில் உயிரிழந்த மக்களுக்கு இந்தியா சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.  பெய்ரூட்டில் ஏற்பட்ட பேரழிவை கண்டு அதிர்ச்சியடையும் அதேவேளை  இறந்தவர்களின் குடும்பத்தினர் மீண்டும் பலம் பெற பிரார்த்திக்கிறோம்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

லெபனான் வெடிப்பு சம்பவத்தில் இதுவரை 200 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் 3000 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளதுடன், இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று லெபனான் நீதித்துறை அமைச்சர்,  சுற்றுச்சூழல் துறை அமைச்சர்,  தகவல் துறை அமைச்சர், நிதித்துறை அமைச்சர் ஆகியோர் தங்களின் பதவி விலகல் கடிதத்தை முறைப்படி பிரதமரிடம் கையளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.