இந்தியாவில் 84 லட்சத்தை கடந்த கொரோனா வைரஸ் பாதிப்பு

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் இன்றைய புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 84,11,724 ஆக உயர்ந்துள்ளது. 

இதுவரை 77,65,966 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 5,20,773 பேர் நாடு முழுவதும் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,24,985 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். 

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 47,638 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 54,157 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 670 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். 

இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் சதவீதம் 92.32 ஆகவும், இறப்பு சதவீதம் 1.49 ஆகவும் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் இதுவரை மொத்தம் 11,54,29,095 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. ஒரேநாளில் மட்டும் 12,20,711 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.