இந்தியாவில் 80 லட்சத்தை நெருங்கும் கோவிட்-19 வைரஸ் பாதிப்பு!

இதுவரை 72,59,509 பேர் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 6,10,803 பேர் நாடு முழுவதும் கோவிட்-19ற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,20,010 பேர் இந்தியாவில் இதுவரை கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதிதாக 43,893 பேர் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 58,439 பேர் இந்தியாவில் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 508 பேர் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் சதவீதம் 90.85 ஆகவும், இறப்பு சதவீதம் 1.50 ஆகவும் உள்ளது. இந்தியாவில் இதுவரை மொத்தம் 10,54,87,680 மாதிரிகள் கோவிட்-19 பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 10,66,786 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாக ICMR தெரிவித்துள்ளது.